கந்தர் அநுபூதி - வீட்டில் அழுகுரல் கேட்காமல் இருக்க
கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே!
விளக்கம்:
'கூகா' என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்றுகூடி அழ அடியேன் இறந்துபோகா வண்ணம் உண்மையான ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே! 'நாகாசலம்' எனப்படும் திருச்செங்கோட்டுமலைமீது வதியும் வேலாயுதனே! ['ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்'] என்னும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறத்தை தேவரீரின் அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! வானுலகத்து சிரோரத்தினமே!
No comments