தலை எழுத்தை எப்படி அழிப்பது - கந்தர் அலங்காரம்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
விளக்கம்:
மீன்கள் துள்ளி விளையாடியதில் அழிந்தது, திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு). தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள மாலை பட்டு அழிந்தது பெண்களின் மனம். பெரிய மயில் மேல் உள்ள முருகன் வேலினால் அழிந்தது.
காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும் அந்த முருகனின்
திருப் பாதம் பட்டு அழிந்தது. முருகப் பெருமானின் திருவடி பட்டு நம் தலை எழுத்து மாறும்.
- அருணகிரிநாதர்.
No comments